FREELANCER
தொற்றா நோய்கள் பிரிவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பு, மற்றும் பிராந்திய சுகாதார திணைக்களம் , இலங்கை புற்றுநோய் சங்கம் மட்டக்களப்பு, ஆகியவற்றின் ஒழுங்கு படுத்தலில் புற்றுநோய் தொடர்பான
மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது
‘புற்றுநோய்க்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் விழிப்புணர்வு நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டது.
நடைப்பயணம் செய்தவர்களால் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் மார்பக புற்றுநோய் தொடர்பாக முன்னெடுக்கவேண்டிய விழிப்புணர்வு தகவல்களும் ஊர்வலத்தின் போது அறிவுறுத்தப்பட்டன .
மட்டக்களப்பு கல்லடி மீனிசை சிறுவர் பூங்கா வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி பூங்காவை சென்றடைந்தது ,காந்தி பூங்காவில் இடம்பெற்ற
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்தார் .