வரதன்
கல்வி அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் தற்போது மாகாண பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் விசேட வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
மட்டக்களப்பு கல்வி வளையத்திற்கு உட்பட்ட புனித மிக்கல் தேசிய பாடசாலையில் தரம் 6 தொடக்கம் 12ம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட கவி நிலை போட்டி பிரிவில் ஒன்பதாம் தரத்தின் Bப்ரிவு வகுப்பறை மாணவர்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட போட்டி பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர் இதற்கு அமைய இப்பாடசாலையின் அதிபர் அண்ணன் பரணி ஜோசப் அவர்களால் வகுப்பாசிரியர் திருமதி ரதிகளா உதயகுமார் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம் பெற்றது
கல்வி அமைச்சினால் பாடசாலை வளாகம் மாணவர்களுக்குரிய கற்றல் சூழ்நிலைக்கேற்ப அமைய வேண்டி இருக்க இவ்வாறான வேலைத்திட்டங்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்