புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகரை பிரிகேடியர் சந்திம குமாரசிங்க மரியாதை நிமிர்த்தம் சந்திப்பு.






மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக பணிகளை பொறுப்பேற்றுக் கொண்ட, பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையை, இன்றைய தினம், கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகரைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டதன் பின்னர், ஆண்டகையின் ஆசியையும் பெற்றுக் கொண்டார். இதன்போது 243 வது இராணுவ படைப்பிரிவின் இராணுவ அதிகாரிகள், மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.