அடுத்த 5 முதல் 10 வருடத்திற்குள் நாமல் ராஜபக்சதான் ஜனாதிபதி என தான் நம்புவதாக கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ரிசாட் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “மகிந்த ராஜபக்ச முஸ்லிம்களுக்கு நல்லது நினைக்ககூடிய நபராவார். கோட்டாபய ராஜபக்ச காலத்தில் முஸ்லிம்களுக்கு நல்லது நடக்கவில்லை.
சிறுப்பான்மையுடன் சேர்ந்து பயணித்ததாலேயே அநுரகுமார திசாநாயக்க இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார்.
225 சிறந்த மக்கள் பிரதிநிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் கோட்டாபயவின் வரலாற்றை வைத்து நாமல் ராஜபக்சவை எடைபோட வேண்டாம்.