ஆறு மாத சிறைத்தண்டனை , பிணை மனு நிராகரிக்கப்பட்டது

 


டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனி லிமிடெட்  நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஏ.ஆர். தினேந்திர ஜான்.

ஆகிய இருவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

ஒக்டோபர் 14 அன்று, நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில், எதிர்மனுதாரர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் பெறுமதி சேர் வரியை (வற்) செலுத்த தவறியதற்காக, மூன்று பணிப்பாளர்களுக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.