மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த சந்தேக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 


மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிட்குட்பட்ட களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த சந்தேக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், கடந்த 24 ஆம் திகதி களுதாவளையிலுள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையிலிருந்து தப்பித்து மூதூருக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரின் உயிரிழப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு காவல்துறையினர் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.