முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் -யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜராக மறுப்பது ஏன் ?

 


கடந்த 2011ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன்  தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.