மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிடுவோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தினம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு வரும் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
பின்வரும் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 2024-இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில உள்ளது குறிப்பிடத்தக்கது
1.ஞா.சிறி நேசன் - மட்டக்களப்பு.
2. இ. சாணக்கியன்-களுவாஞ்சிகுடி
3. தி.சரவணபவன்,-கல்லடி, 3.
4. கருணாகரன், -அரசடித்தீவு.
5 ஈ.ஸ்ரீநாத் , -வந்தாறுமூலை.
6.சி.சர்வானந்தன், -இலுப்படிச்சேனை
7. கி.சேயோன்,-சந்திவெளி,
8. திருமதி ஜெயந்தி.-களுதாவளை,