யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரியும் ஊடகவியலாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை(11.10.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் யாழில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வரும் நிலையில், நேற்று மாலை அவர் வீடு திரும்பும் போது கஸ்தூரியார் வீதியில் உள்ள தனியார் கூல்பார் ஒன்றுக்கு அருகாமையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தலைக்கவசத்தினால் குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.