நவராத்திரி விழாவை முன்னிட்டு "வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" மயிலம்பா வெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் நவராத்திரி விழா


 

 

 


 

 


 


















































 நவராத்திரி விழா நிகழ்வு   (12.10.2024) காலை 10.00 மணிக்கு உதவும் கரங்கள் அமைப்பின் பிரதான மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளரும் உதவும் கரங்கரள் நிறுவன தலைவருமான திரு.சதாசிவம் ஜெயராஜா அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக  மட்டக்களப்பு கல்வி வலய  பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நி.மகேந்திரகுமார்  அவர்களும்  ஆணிவேர்  உற்பத்திகள் பணிப்பாளர்
 திருமதி.எஸ்.ஜனகன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு  பிரதேச சுற்றாடல் உத்தியோகர்த்தர் திருமதி ர.பாஸ்கரன் அவர்களும் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகர்த்தர் திருமதி பு.பிறேம்குமார்  அவர்களும் கௌரவ அதிதிகளாக  ஓய்வுநிலை அதிபர்களான திருமதி தி.கரிதாஸ் மற்றும் திருமதி.ச.அருட்ஜோதி ஆகியோரும்  மற்றும்
 உதவும் கரங்கள் இல்ல நிருவாகிகளும் சிறார்களும், அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூக செயற்பாட்டாளர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

நவராத்திரி விசேட பூசை நிகழ்வைத் தொடர்ந்து  நிகழ்வில் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் மேடையை அலங்கரித்திருந்தன.