மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் பாலர் பாடசாலையின் சர்வதேச
சிறுவர் தின நிகழ்வு கதிரவன் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் சிறப்பாக
இடம்பெற்றது.
நிகழ்வில் ஆன்மீக விருந்தினராக புதுக்குடியிருப்பு அருள்மிகு விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவசிறி கோ.கிரிதரக்குருக்கள், சிறப்பு விருந்தினர்களாக மட்/மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர் திரு அ.குலேந்திரராஜா, மட்டக்களப்பு மஞ்சம் தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் திரு மா.சோமசூரியம், மட்/ மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய பிரதி அதிபர் திரு கோ. சசிகுமார், புதுக்குடியிருப்பு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி தயனி கிருஷ்ணாகரன், பட்டிமன்றப் பேரவை செயலாளர் கவிஞர் அழகு தனு, கதிரவன் கலைக்கழகச் செயலாளர் புதுவையூர் பு. தியாகதாஸ், நகைச்சுவை நடிகர் த.பூபாலசிங்கம், மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் பங்கு பற்றியிருந்தனர்.
கதிரவன் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆடல், பாடல், பேச்சு, வினோத உடை முதலான நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்வின் போது பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பாராட்டுப்பெற்று பரிசு வழங்கப்பட்டதோடு, கதிரவன் பாலர் பாடசாலை ஸ்தாபகர் கதிரவன் த.இன்பராசா அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரால் கௌரவம் வழங்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.