வெள்ளம் காரணமாக தோணியில் வந்த புதுமண தம்பதி.

 

 


 சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக  குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி  மூழ்கியுள்ளமையால்  புதுமண தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம்  சத்தங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன், திருமண  காருக்கு பதிலாக, அவர்கள் தோணியை பயன்படுத்தியுள்ளனர்.



இதை பார்த்த சிலர் அவர்களை கேலி செய்து வரும் நிலையில் , எந்த ஒரு சூழ்நிலையும் தாங்கும், துணிச்சல் மிக்க பொருத்தமான ஜோடி என கூறி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மேலும் , களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளின் வீதிகள்  நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது