வயதான தமிழ் அரசியல்வாதிகள் ஓய்வு பெறவேண்டும் .

 


தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை.

அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போதுள்ளவர்களும் அவ்வாறு ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாயப்பளிக்க வேண்டும்.

அத்தோடு, இளைஞர்களும் தனாக வந்து அரசியலை கையில் எடுத்தால் மாத்திரமே தமிழர் அரசியல் களத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.