மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது வெற்றி உறுதிப்படுத்தப்படும் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா கட்சியின் வேட்பாளரும் முன்னாள் எராவூர் நகர சபை முதல்வருமான M.S.M.நழீம்

 

வரதன்

 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது வெற்றி உறுதிப்படுத்தப்படும் அதற்குரிய தேர்தல் வியூகங்களை அமைத்து நாம் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா கட்சியின் வேட்பாளரும் முன்னாள் எராவூர் நகர சபை முதல்வருமான MSM.நழீம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் மூன்று இடங்களிலும் எமது தலைவரினால் சிறந்த வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர் இறைவன் அருளால் மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றி பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றும் அதற்குரிய தேர்தல் வியூகங்களை அமைத்து நாம் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்


எராவூர் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நசீர் அகமட் மற்றும் அலிசாயிர் மௌலானா தேர்தல் களத்தில் இல்லாத காரணத்தினால் எமது கட்சிக்கு இங்கு கணிசமான வாக்குகளை இம்முறை பெறக்கூடியதாக இருக்கும் இதன் மூலம் மாவட்டத்தில் நாம் இம்முறை வெற்றி பெறுவோம்


இம்முறை மாவட்டத்தில் எமது வெற்றி பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா கட்சியின் வேட்பாளரும் முன்னாள் எராவூர் நகர சபை முதல்வருமான MSM.நழீம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்