உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் வழிநடத்தியவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்டம் அமுல்படுத்தப்படும்

 

 


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் வழிநடத்தியவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்க விசேட தலையீட்டை ஆரம்பித்துள்ளோம். அதற்காக இடம்பெற்ற விசாரணைகளின் ஊடாக இந்த அறிக்கை காணாமல் போனது எப்படி? அவற்றின் பக்கங்கள் எவ்வாறு தொலைந்து போனது என்பது தொடர்பில் விசாரித்து வருகிறோம். ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில், முன்னாள் சட்டப் பணிப்பாளர் தலையிட்டுதான் இந்த விடயங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கியிருந்தார். அப்படியானால் அந்த அறிக்கையின் சில பகுதிகள் எப்படி தொலைந்து போனது? ஒப்படைக்கும் போது இருந்தனவா? அதன் பிறகு என்ன நடந்தது? இதையெல்லாம் இந்த ஆய்வுக் குழு விசாரித்து வருகிறது. எனவே, இந்நாட்டு மக்களுக்கு எந்த அநீதியும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை.