பல்வேறு சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட மூடப்பட்டிருந்த 400 ஊழல்
பைல்களை அரசாங்கம் மீள திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார
திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஊழலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தினார்.
“குற்றம் செய்தவர்களை தண்டிக்க எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி கேட்பவர்கள், நாங்கள் திருடர்களைப் பிடிக்கத் தொடங்கும் போது புலம்ப வேண்டாம் எனவும்,
குற்றம் செய்பவர்களை பொறுப்புக்கூற வைப்பதில் NPP யின் உறுதிப்பாட்டை கேள்வி எழுப்பும் விமர்சகர்களிடம் அவர் மேலும் தெரிவித்தார்