அரச வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி திடீரென செயற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .

 


பொலன்னறுவை வெலிகந்த நகரிலுள்ள அரச வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி இன்று (08) மாலை திடீரென செயற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

113, சுசிரிகம, வெலிகந்தவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய டபிள்யூ.டி.ஜி. அநுர விஜேசிங்க என விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்