வரதன்
33 சுயேட்சைக் குழுக்களும், 23 கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பில் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ள நிலையில் முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தேசிய கூட்டணி உள்ளிட்ட 06 சுயேட்சைக்குளுக்களும்
நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்டீகளை தெரிவுசெய்வதற்காக இம்முறை 392வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.