ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க சில கமிட்டிகளை ரனில் விக்ரமசிங்க நிறுவியது உண்மையை கண்டறிய அல்ல, திசை திருப்பவே- ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ஈஸ்டர் நிகழ்வு தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே பாதுகாப்பு தரப்பினரிடம் விசாரணைக்காக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க சில கமிட்டிகளை ரனில் விக்ரமசிங்க நிறுவியது உண்மையை கண்டறிய அல்ல எனவும் விசாரணைகளை திசை திருப்பவே என அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பில் உண்மையை மறைக்கவே இந்த நபர் தலையீடு செய்துள்ளதாக கூறிய ஜனாதிபதி உண்மையை வெளிக்கொண்டுவர அல்ல என அவர் குறிப்பிட்டார்.