வி.ரி.சகாதேவராஜா
தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும், அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியிப் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
மட்டக்களப்பு மாநகரின் முதல்வராக 5 வருடங்கள் சிறப்பான பணியினை வழங்கியிருந்தேன். மட்டக்களப்பு நகரத்துக்கு எனக்கு கிடைத்த அதிகாரம் மாவட்டத்துக்கு விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதற்காகவே இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இத் தேர்தலில் வெற்றிபெறும் போது, எமது வளங்களான விவசாயம், மீன்பிடி, கால்நடை என ஏனைய பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எமது ஒத்துழைப்புடன் முன்னேற்றக்கூடிய வகையில் எமது திட்டங்கள் வகைப்படுத்தப்படும்.
அதே போன்று யுத்தத்தினால் கணவனை இழந்தவர்களுக்கான வழிகாட்டிச் செயற்பாடும், பெருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் வழிவகைகள் செய்து கொடுக்கப்படும். தற்சார் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வழிமொழிந்து அதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். வெள்ளக் காலங்களில் வெள்ளம் ஏற்படாத வகையிலும், வரட்சி காலத்தில் வரட்சி ஏற்படாத வகையிலும் சரியான நீர்முகாமைத்துவத்தினை செய்யவேண்டும்.
தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் அதிக
ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில்
திகழும், அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது
சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். இலஞ்சம் ஊழல்களில்
ஈடுபடாதவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறானவர்களைத் தெரிவு செய்யுமு;
போது மிக வினைத்திறனான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யலாம்.
அப்போது பாராளுமன்றத்தில் வினைத்திறனான செயற்பாடுகள் நாம் மேற்கொள்ளலாம்
அதன் மூலம் எமது பிரதேசம் வளர்ச்சியடையும். அந்த வளர்ச்சி மூலமாக
பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையும்.
தமிழ்த் தேசியச் சிந்தனையுடன் நாம் அனைவரும் தொடர்ச்சியாகப் பயணிக்க
வேண்டும். அச் சிந்தனையில் இருக்கின்ற நாம் அனைவரும் மண்ணையும் மக்களையும்
பாதுகாப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும்.
அத்துடன் எனது 7ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற தமிழ்த் தேசியத்திற்கு எதிரான
எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் நாட்டின்
நன்மைக்காக செய்யப்படும் திட்டங்களுக்கு எமது கட்சி ஆதரவு வழங்கும்
என்றார்.