ரீ.எல் ஜவ்பர்கான்
4500 வீடுகளில் காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை நான்கு பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசீர்தீன் தெரிவித்தார்
காத்தான்குடி பிரதேசம் முழுவதும் பாரிய டெங்கு சோதனை நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதன் அடிப்படையில் இன்று வரை கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 5000 வீடுகள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்