மீண்டும் முட்டையின் விலை அதிகரித்து செல்வது ஏன் ?

 


பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் தற்போதைய நிலவரத்தால் அடுத்த சில நாட்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.