மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்கள் SLAS SPECIAL GRADE பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக அதி கூடிய புள்ளிகளைப்பெற்று விசேட தரத்தில் சித்தி அடைந்துள்ளார்.

 


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்கள்  SLAS SPECIAL GRADE பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக  அதி கூடிய புள்ளிகளைப்பெற்று விசேட தரத்தில் சித்தி அடைந்துள்ளார்.

 
2003 இல்  அரச சேவையில் இணைந்துகொண்ட வாசுதேவன் அவர்கள் கடந்த  ஐந்து வருடங்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக சேவையாற்றி வருகிறார்.


விசேட தரத்தில் சித்தி பெற்றுள்ள  பிரதேச செயலாளர்  அவர்கள் எதிர்காலத்தில்  அமைச்சுக்களில் அது உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 
சிவானந்தா பாடசாலையின் முன்னாள் மாணவரும்  தற்போது  சிவானந்தா பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவராகவும் உள்ள வாசுதேவன்  அவர்கள் மட்டக்களப்பு நொச்சிமுனையை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.