இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளிற்கு சர்வதேச நாணயநிதியம்   பாராட்டு தெரிவித்tதுள்ளது

 


இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளிற்கு சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜியோஜோர்ஜியாவா  பாராட்டு தெரிவித்துள்ளார்.

வோசிங்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை குழுவை சந்தித்தபின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 இலங்கையின் திறைசேரி செயலாளர் மகிந்தஸ்ரீவர்த்தன,மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணயநிதியத்தின் தலைவரை சந்தித்துள்ளனர்.

இலங்கையின் பிரதிநிதிகள் குழுவுடன் சிறந்தபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டேன் என தெரிவித்துள்ள கிறிஸ்டினா ஜியோஜிவா சர்வதேச நாணயநிதியத்தின் தி;ட்டத்தின் கீழ் மிகவும் கடினமாக முயற்சி செய்து பெறப்பட்ட பலாபலன்களை பாதுகாப்பது குறித்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிற்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்வது குறித்த அர்ப்பணிப்புடன் சர்வதேச நாணயநிதியம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.