மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அமைய பெற்ற முதலாவது TENNIS மைதானம் திறந்துவைக்கப்பட்டது.

 



 

 













 

















FREELANCER






 KOV நம்பிக்கை நிதியம் மற்றும் TKS நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அமைய பெற்ற முதலாவது TENNIS மைதானம் (2024.10.17) திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து சிவானந்த வித்தியாலயத்தில் கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுப்போட்டி ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

 மட்டக்களப்பு மத்திய மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி முதலிடத்தினை பிடித்து வெற்றி பெற்றது. இவ் போட்டியில் கல்லூரி புனித மிக்கல் கல்லூரி சிவானந்த வித்தியாலய அணிகள் கலந்துகொண்டிருந்தன. இவ் நிகழ்வினை பாடசாலை அதிபர் திரு தயாபரன் தலைமை தாங்கியதுடன் இணை தலைமைகளாக பழைய மாணவர் சங்க தலைவர் திரு வாசுதேவன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு குணராஜா அவர்களும் வகித்ததுடன் அதிதிகளாக பிரதி வலய கல்வி பணிப்பாளர் திரு. ஹரிகாரராஜ் உடற்கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் திரு லவகுமார் முன்னாள் பாடசாலை அதிபர் திரு . சுவர்ணேஸ்வரன் மற்றும் மல் யுத்த பயிற்றுவிப்பாளர் திரு . திருச்செல்வம் ஆகியோருடன் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.