12 மற்றும் 13ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாது.

 


நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் நாளை 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளைமறுதினம் நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதுடன், 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியை அமைதிக் காலப்பகுதியாக கருதி அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் மத வழிபாடுகள் என்ற போர்வையில் அரசியலில் ஈடுபட கூடாதென்றும், இக்காலப்பகுதியில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலில் பிரச்சாரங்கள் தீவிரமாக இல்லை தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் கூட பிரசாரங்களுக்கு வருவதில்லையென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இம்முறை 17 மில்லியன் வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.