14ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உங்கள் பெறுமதியான வாக்குகளை அளியுங்கள்" - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க

 


எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, என்பதால் தமது வாக்கினை பயன்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

வாக்களிப்பது என்பது அரசியலமைப்பு ஊடாக உங்களுக்கு வழங்குப்பட்டுள்ள உரிமையாகும்.

எனவே அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டியது உங்களது கடமையாகும்.

வாக்களிப்பது உங்கள் உரிமை. வாக்கு உங்கள் பலம்...

எனவே 14ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உங்கள் பெறுமதியான வாக்குகளை அளியுங்கள்" என்றார்.