144 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது.

 


கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு, கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து சுமார் 144 இலட்சம் ரூபா பணத்தை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

றாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.