மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி கலாச்சார மண்டபத்தில் இரண்டாம் மொழி பயிற்சி நெறி 150 மணித்தியால நிகழ்நிலை மூலமான கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

 

 





























மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி கலாச்சார மண்டபத்தில் 2024.11.10.

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி 150 மணித்தியால நிகழ்நிலை மூலமான ற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .

நிகழ்வில் அதிதிகளாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு .கயான் சம்பத் பொத்துபிடி, கல்வி மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர் திருமதி .செவ்வந்தி அத்தநாயக்க , மேல் மாகாண பாடநெறி இணைப்பாளர் திருமதி திருமதி ஹிரோஷிமா பெரேரா ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

இவ் நிகழ்வில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 46 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கப்பட்டது .

மாணவர்கள் கலாச்சார ஆடைகளுடன் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும் .

நிகழ்வில் குறுநாடகங்கள் , நடனங்கள் , பாடல்கள் இடம் பெற்றன .

மாணவர்கள் , பெற்றோர்கள் அரச உத்தியோகத்தவர்கள் , நலம் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .