அரசியல் சிபாரிசுகள் காரணமாக வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு
நியமிக்கப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக மீள அழைக்க அரசாங்கம்
தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்
வெளிவிவகார அமைச்சு அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள்
விரைவில் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரச
பத்திரிகையான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.