16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை?

 


அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக், டிக்டொக் மற்றும் எக்ஸ் தளம் ஆகிய சமூக ஊடகங்கள் இந்த சட்டத்திற்குள் அடங்கும் எனவும் அத்துடன், யூடியூப் சமூக ஊடகமும் உள்ளடக்கப்படும் என அவுஸ்திரேலிய தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் தெரிவித்துள்ளா்.

“எங்கள் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன. அதனால் நான் அதை தடைசெய்ய அழைப்பு விடுத்துள்ளேன் என அன்டனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் சமர்பிக்கப்படும். சமர்பிக்கப்பட்ட சட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தை பெற்று 12 மாதங்களுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.