ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றுள்ளது.

 


பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றதையடுத்து அந்த கட்சிக்கு மொத்தமாக 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேநேரம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியப் பட்டியல் ஊடாக 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்தக் கூட்டணிக்கு 40 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் மொத்தமாக 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு 2 தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக அந்தக் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.