ஜவ்பர்கான் & செய்தி ஆசிரியர்
இரத்தப் புற்று நோய் மற்றும் தலசீமியா நோய்களை பூரணமாக குணப்படுத்த முடியும் மட்டக்களப்பில் புதிய இரத்த மாற்றீடு சிகிச்சை .
உயிர் கொல்லி நோய்களாக கருதப்படுகின்ற இரத்த புற்றுநோய் மற்றும் தலசீமியா நோய்களுக்கான மூல உயர்கல மாற்றீடு சிகிச்சை முதன்முறையாக மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது .
சுகாதார அமைச்சும் இரத்த இரத்த மாற்றீடு சிகிச்சை நிலையமும் இணைந்து புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது .
மட்டக்களப்பு இரத்த வங்கியூடாக மூல உயிர்க்கல மாற்றீடு சிகிச்சையை முறையை இன்று மட்டக்களப்பில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தஷமாற்று சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி நிஷாந்தினி டிசாந்தன் தெரிவித்தார் .
சிகிச்சைக்கு தேவையான இரத்தம் சேகரிக்கின்ற நடவடிக்கை இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பாரிய இரத்ததான முகாம் இடம்பெற்றது. சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், ஹெல்ப் எவர் பௌன்டேஷன் , கிறீன் ஸ்பேஸ் நிறுவனங்கள் இதற்கு அனுசரணை வழங்கியிருந்தன.
மட்டக்களப்பு சுவாமி விவேகானந்த அழகிய கற்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த மாற்று சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி நிஷாந்தினி டிசாந்தன் வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் கீர்த்திகா மற்றும் மதனழகன் உட்பட பலர் இரத்ததான ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டனர் .
புதிய முறையிலான சிகிச்சை முறை காண இரத்தம் வழங்குபவர்களின் பெயர் பட்டியலை இன்று ஒரு பதிவிடாக அவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யும் நடவடிக்கையும் இன்று இடம்பெற்றது .
போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெரும்பாலானோர் கலந்து கலந்து கொண்டனர் .