(கல்லடி செய்தியாளர்)
நாடளாவிய ரீதியில் 14.11.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம் வருமாறு:-
இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இராசமாணிக்கம் சாணக்கியன்- 65458வாக்குகளும்,ஞானமுத்து ஸ்ரீநேசன்- 22773 வாக்குகளும்,இளையதம்பி ஸ்ரீநாத்- 21202 வாக்குகளும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்- 32410 வாக்குகளும்,தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கந்தசாமி பிரபு - 14856 வாக்குகளையும் பெற்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 பாராளுமன்ற தேர்தலில் இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்புமாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது , அதேவேளை 2020 நாடாளுமன்ற தேர்தலில் பிள்ளையான் அவர்கள் 55000 க்கு மேட்பட்ட விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார் .