ஏறாவூர் இஹ்லாஸ் பாலர் பாடசாலையின் விடுகை விழா- 2024



 

 

 

 


(MUM.முஜாஹித் -ஏறாவூர்)

 

 


மட்டக்களப்பு ஏறாவூர் மிராகேணி பிரதேசத்தில் சிறப்பாக  இயங்கி வருகின்ற இஹ்லாஸ் பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான மாணவர்களின் விடுகை விழாவும் பரிசளிப்பு  நிகழ்வு 09/11/2024 சனிக்கிழமை இன்று ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாலர் பாடசாலையின்  தலைவர் ஐ.டி.அப்துல் றகுமான் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிதியாக  பொலன்னறுவை மாவட்ட உள்ளுராட்சி  உதவி ஆணையாளர்  ஜே.எம்.அமீன் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்பள்ளிக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல் .பாறூக்,
ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம்,மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எம்.தாஹா ஹுசைன் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலை அத்தியட்சகர் எம்.எம்.செய்னி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வினை அலங்கரித்ததுடன் அதிதிகளின் பாராட்டினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது .