சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு கடந்த ஆண்டு நடத்திய அல்குர்ஆன் மனனப் போட்டியைப் போன்று, இவ்வருடமும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியின் இரண்டாம் கட்டத்தை 2025ஆம் ஆண்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் துவக்குவதற்காக, இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுடன் சந்தித்து ஆலோசித்தார்.
இந்த கலந்துரையாடலில் திணைக்களத்தின் மதப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எம். முப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டிக்கான தெரிவுகள் டிசம்பரில் நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டில் மூவின்பார்க் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வின் பரிசளிப்பு விழா ஷங்க்ரிலா ஹோட்டலில் மிகச்சிறப்பாக நடந்தது.
மேலும், முழுமையாக அல்குர்ஆன் மனனமிட்ட பார்வையற்ற சிறுவன் முக்பில் சினானுக்கு சவூதி தூதுவர் அல்கஹ்தானி இலங்கையின் சவூதி தூதரகத்தில் பரிசளித்துச் கெளரவித்தார்.