எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் .

 


 

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
இதன்படி, மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என நேற்று இரவு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
 
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.