5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபரை நேற்று (04) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய, கொரதொட, மஹதெனிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும், இவர் விற்பனை அதிகாரியாக பணிபுரிபவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.