மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான தரை வழிப்போக்குவரத்துக்கள் தற்போது வரையிலும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த்தினால் 15900 குடும்பங்களைச் சேர்ந்த 49123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் 11890 குடும்பங்களைச் சேர்ந்த 37541 பேர் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். தற்போது வரையில் 56 பொதுஇடங்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த 7241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களும் முற்றாக வெள்ளத்தினால் அழிவை சந்தித்துள்ளன.