பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் அவற்றை விநியோகிக்கும் தபால் நிலையத்தில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.