”இந்தியாவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துகொண்ட 9 அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

””இந்தியாவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துகொண்ட 9 ஒப்பந்தங்களை 9 ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான சமகால அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ பகிரங்க கோரிக்கை  விடுத்துள்ளார்.

கொழும்பில்   ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

”2023ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்குச் சென்றிருந்த தருணத்தில் 9 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தார். இந்த 9 ஒப்பந்தங்களும் மிகவும் அபாயகரமானவையாகும்.

இலங்கையின் எரிசக்தி சுயாதீனத்தை நீக்கும், இலங்கையின் நிலபரப்பை இந்தியாவுடன் இணைக்கும், கடல் மார்கமாக திருகோணமலைவரை நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையை அமைக்கும் மற்றும் இலங்கையின் கனிய வளத்தை கொள்ளையடிக்கும் இந்த 9 ஒப்பந்தங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

பொது தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்படடுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பகிரங்க அறிவிப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும். ஆனால், இதுதொடர்பில் கண்டுகொள்ளாத போக்கில் அரசாங்கம் செயல்படுகிறது.

குறித்த ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்த நாடாளுமன்றமும், அமைச்சரவையும் அல்லது புதிய அமைச்சரவை அவசியமல்ல. ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துமாறே கோருகிறோம்.

இந்த ஒப்பந்தங்களை வெளிப்படுத்தாவிட்டால் அரசாங்கம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழும் என்பதுடன், அரசாங்கம் எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதும் பிரச்சினைக்கு உள்ளாகும்.

பொதுத் தேர்தலின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வர உள்ளார். ஒப்பந்தங்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லவே அவர் இலங்கை வருகிறார். அதனால் தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை அரசாங்க பகிரங்கப்படுத்த வேண்டும். அப்போது மோடியிடம் எமக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின் ஊடாக இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாதென அரசாங்கத்துக்கு கூற முடியும்.

இல்லாவிட்டால் இந்தியா என்ற பெரிய அண்ணாவின் அழுத்தங்களில் இருந்து இந்த அரசாங்கத்தால் விடுப்படி முடியாதென்பதுடன், அவர்களின் பொறியில் சிக்குவார்கள்.” என்றார்

ல அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ பகிரங்க கோரிக்கை  விடுத்துள்ளார்.