சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,000 சுவிஸ் பிராங்குகள் ($1,000) வரையிலான முகத்தை மூடுவதற்கான தேசிய தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க சுவிஸ் அரசாங்கம் ஒரு வரைவு சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது.
அனுப்பப்பட்ட சட்ட வரைவு, முகத்தை மூடுவதை தடை செய்வது தொடர்பில் கடந்த ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது 51.2 சதவீத வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்டதற்கமையவே இது நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 2021-ல் நடந்த வாக்கெடுப்பில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டு, முஸ்லிம் சங்கங்களால் கண்டிக்கப்பட்ட இந்த நாடு தழுவிய தடை வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்டது.
இந்த தடை விமானங்கள் அல்லது இராஜதந்திர மற்றும் தூதரக வளாகங்களுக்கு பொருந்தாது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற புனித தளங்களிலும் முகங்கள் மறைக்கப்படலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக, உள்ளூர் பழக்கவழக்கங்கள் அல்லது வானிலை காரணமாக முகத்தினை மறைக்க அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
கலை மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் அவை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தடைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
8.6 மில்லியன் மக்களைக் கொண்ட சுவிஸ் மக்கள்தொகையில் 5 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர், பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் கொசோவோவில் பூர்வீகமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.