மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அழைக்கப்பட உள்ளார் .

 


2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய   தெரிவித்துள்ளார்.

  (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

 17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரின் அறிவுரைகளை நான் ஒருபோதும் பெறமாட்டேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 அரசியலமைப்பின் அடிப்படையான ‘மக்கள் ஆணையை’ புரிந்து கொள்ளாத ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.