மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(10) இரவு காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான கார்த்திகோசு உருத்திரகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
கருங்கல் உடைக்கும் இடத்தில் இருந்தபோது காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்