துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

 


தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனி நபர்களுக்கு உரிமத்தின் அமைய வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நவம்பர் 21ஆம் திகதி  வரை இதற்கான கால எல்லை நீடிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.