வரதன்
புதிய ஜனாதிபதியின் ஊழல் ஒழிப்பு விடையங்களுக்கு எமது கட்சி தொடர்ச்சியான ஆதரவினை வழங்க உள்ளது, கடந்த காலங்களில் தமது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை புதிய அரசாங்கம் அதனை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முதன்மை வேட்பாளர் தம்பி பிள்ளை சிவானந்த ராஜா தெரிவித்தார்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடமைப்பு திட்டங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் தேர்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் காரணத்தினால் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான டக்ளஸ் தேவானந்தா 38 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த காலங்களில் தமது அமைச்சினால் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை புதிய ஜனாதிபதியிடம் அதனை நிறைவு செய்து தரும்படியும் வேண்டியிருந்தார் அரசாங்கம் அதனை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளதுடன்
மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக ஆசனங்கள் கிடைக்கும் போது இப்பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும் எனவும் முன்னாள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையகப்படுத்திய காணிகளை பெற்று மாவட்டத்தில் காணி வீடு அற்றவர்களுக்கு வழங்க திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் புதிய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்துவதன் மூலம் தான் மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை முன்னெடுக்க முடியும்
எதிர்ப்பு அரசியல் நடத்துவதன் மூலம் மக்களுக்கான எந்த தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாது , புதிய ஜனாதிபதியுடன் பேசி எதிர்வரும் காலங்களில் புதிய அமைச்சுகளை பெற்றுக் கொள்வதன் மூலம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும் ஜனாதிபதியின் ஊழல் ஒழிப்பு விடையங்களுக்கு எமது கட்சி தொடர்ச்சியான ஆதரவினை வழங்க தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் (EPDP) கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்
முதன்மை வேட்பாளர் தம்பி பிள்ளை சிவானந்த ராஜா இன்று மட்டக்களப்பில்
இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்