மட்டு.காந்திப் பூங்கா வளாகத்தில் நின்ற பாரியமரம் வேரோடு சரிந்து வீழ்ந்தது!




 









(கல்லடி செய்தியாளர் & செய்தி ஆசிரியர் )



மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் நின்ற பாரிய மரம் வீசிய கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் குறித்த மரத்தை வெட்டி அகற்றினர்.

இதன்போது மரம் வீழ்ந்ததனால் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்குச் சிறு சேதமேற்பட்டுள்ளது.

அத்தோடு வீதியால் பயணித்தவர்கள் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.