இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களிடையே விருதுப் போட்டிகள் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் இடம் பெற்றது




























 ரீ.எல் ஜவ்பர்கான் & செய்தி ஆசிரியர் .

 

 

 

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கிடையிலான விருதுப் போட்டிகள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை நடராஜானந்தா மண்டபத்தில் இன்று  நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 193 போட்டியாளர்கள் 33 நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்

நடனம், நாட்டியம், அறிவிப்பாளர், நாடகம், பேச்சு, வில்லுப்பாட்டு,பாடல் உட்பட 33 நிகழ்ச்சிகளில் இளைஞர் யுவதிகள் பங்கெடுத்திருந்தனர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜெகத் லியனகே  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட  உதவி பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் அதிகாரிகள்,என பெருமளவிலானோர் கலந்து கொண்டு இருந்தனர்

இளைஞர்களின் ஆற்றலையும் ஆளுமைகளையும் வெளிப்படுத்தும் இப் போட்டிகளினூடாக  மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்படும் முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றவர்கள் தேசிய மட்டத்துக்கு மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி பணப்பரிசில்களையும்,இளைஞர் விருதுகளையும் ஜனாதிபதியின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையகத்தில் நடைபெறும் இளைஞர் விருது விழாவில் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளின் நடுவர்களாக சிரேஷ்ட ஊடவியலாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது