இலங்கை வரலாற்றி லேயே ஜனாதிபதிக்குரிய சம்பளத்தை பெறாத ஒரே தலைவன் எங்களது கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா அவர்களே ஆகும்- தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வா. திலீப் குமார்

 இலங்கையின் 78 வருட கால அரசியலில் இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஒரு முன்மாதிரியாகவே தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார்- தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வா. திலீப் குமார்
    



 

 


  வரதன்

 

 

இம்முறை இடம் பெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில்  மக்களின் ஆணை கிடைபதன் மூலமே பாராளுமன்றத்தின் அதிகாரத்தினை முற்றாகக் கைப்பற்றி ஜனாதிபதி தேர்தலில் மூலம் கிடைக்கப்பெற்ற வெற்றியினை கொண்டாடும் போது இங்குள்ள மக்களும் அவருக்கு நாமும் ஆதரவு வழங்கியிருக்க முடியும் என அவரது தற்போதைய செயற்பாட்டின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது இங்குள்ள மக்கள் அவரை தற்போது தங்களது குடும்பத்தில் ஒருவராக வைத்துப் பார்க்கின்றனர்


தற்போது ஜனாதிபதியையும் எமது கட்சியையும் மக்கள் மிகவும் நேசிக்க தொடங்கியுள்ளதுடன் நம்பிக்கையும் வைத்துள்ளனர் மக்களின் வரிப்பணத்தை வீணாக்காத வகையில் எமது திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ளத்துடன் எமது கட்சியில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் கள் பாராளுமன்ற வரப்பிரசாதங்களை எடுப்பதில்லை இலங்கை வரலாற்றி லேயே ஜனாதிபதிக்குரிய சம்பளத்தை பெறாத ஒரே தலைவன் எங்களது கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா அவர்களே ஆகும்


இலங்கையின் 78 வருட கால அரசியலில் இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஒரு முன்மாதிரியாகவே தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வா. திலீப் குமார் நேற்று இரவு கிரானில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்