சுகாதார அமைச்சினால் தட்டம்மை நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட உள்ளது .

















ஜவ்பர்கான் & செய்தி ஆசிரியர்

 

 

 


நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் இனம் காணப்பட்டுள்ள தட்டம்மை நோயை இல்லாதொளிக்கும் சுகாதார அமைச்சின் விசேட வேலை திட்டத்தின் கீழ் நாளை முதல் நாடளாவிய ரீதியில் தட்டம்மை நோய்க்கு கெதிரான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன .


இத்திட்டத்தின் கீழ் நாளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தட்டம்மை தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுவதை யொட்டி மட்டக்களப்பு தாதிய கல்லூரியில் தாதிய  மாணவர்களிடையே டையே தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இதனை மேற்கொண்டிருந்தது

மட்டக்களப்பு தாதிய  கல்லூரியில் பொது  சுகாதார பரிசோதகர் டி மிதுன் ராஜ் முன்னிலையில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்ளாத தாதிய மாணவர்களின்  மாணவர்ளின் குழந்தையின் சுகாதார வளர்ச்சிப பதிவேடுகள் பரிசோதிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் ஒரு தடுப்பூசி ஏற்றியிருந்தால் நாளை ஆரம்பமாகும் தடுப்பூசி ஏற்றல்  நடவடிக்கையின் போது  இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 அல்லது இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றாமல் இருந்தால் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொள்ள வேண்டும் அல்லது குறித்த சுகாதார அட்டை தொலைந்து போயிருந்தாலும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.